சூரிச் விமான நிலையத்தில் தீடிரென நீண்ட வரிசையில் பயணிகள் குவிந்து காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சுவிட்சர்லாந்தில் உருமாறிய கொரனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற நாட்டு சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான நிலையங்களில் குவிந்து காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மிக நீளமான வரிசையில் பயணிகள் காத்திருந்துள்ளனர். எனினும் ஒரு சில கவுண்டர்கள் தான் திறக்கப்பட்டிருந்ததாம்.
மேலும் சனிக்கிழமைகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளதால் நீளமான வரிசையில் மக்கள் நிற்பதாக கூறப்பட்டுள்ளது. வழக்கமாக, பயணிகளுக்கான பரிசோதனைகள் முழுவதும் குறிப்பிட்ட அரை மணி நேரத்திற்குள் முடிந்துவிடுமாம். அதன்பின்பு பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சரி பார்த்த பின்பே பயணிகள் அனுமதிக்கப்படுவதால் சில வாரங்களாகவே இவ்வாறு தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே அதற்காக கலந்தாலோசனை நடப்பதாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் விமான நிலையத்திலிருந்து காலை 9 மணி முதல் 10 மணிக்கு முன்பாக சுமார் 14 விமானங்கள் புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.