Categories
உலக செய்திகள்

தீடீரென சுற்றி வளைத்த அதிகாரிகள்… அதிர்ந்து போன பெண்… இது தான் காரணமா..?

கனடாவில் பிசிஆர் சோதனை செய்யாததால் பெண் ஒருவர் அதிகாரிகளால் ரகசியமான இடத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கனடாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Nikki Mathis. இவர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதன் பின்பு கனடா திரும்பிய Nikki கால்கரி விமான நிலையம் வந்தபோது அதிகாரிகள் அவரின் ஆவணத்தை பரிசோதித்துள்ளனர். அதன் பின்பு Nikkiயை பல அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு வெள்ளை நிற வேனில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் எங்களுடன் வரவில்லை எனில் கைது செய்வோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் பயந்த Nikki உடனடியாக அவரின் கணவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்பு அவரின் கணவர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். அதன்பின்பு அதிகாரிகள் அங்கிருக்கும் ஓட்டலுக்கு Nikkiயை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை போலவே பலர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் Nikki பதற்றம் அடைந்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தினர் அவர் இருக்கும் இடம் தெரியாமல் தவித்து வந்துள்ளனர். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து Nikkiயை விடுவித்துள்ளனர். அதாவது பிற நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் பயணிகள் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரமாக ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி Nikkiயும்  சமர்ப்பித்துள்ளார்.

எனினும் பிசிஆர் பரிசோதனைகள் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளப்படும். அதாவது கொரோனா மூலக்கூறு இருக்கிறதா? என்ற சோதனை தான் அவசியமானது. ஆனால் அவர் பிசிஆர் பரிசோதனையை சமர்ப்பிக்கவில்லை என்பதால்தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் அனைவரும் கட்டாயமாக பிசிஆர் முறையில்தான் சோதனையை செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |