Categories
உலக செய்திகள்

தீடீரென தீப்பிடித்த விமானம் …. 2 பேர் பலி …. தீவிர விசாரணையில் போலீஸார்….

ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் கம்சட்கா  பகுதியை கோரியாகி  எனும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் அருகே ஆன் ,2 எனும் ஒற்றை இயந்திரம் கொண்ட விமானம் ஒன்று பறந்து சென்றபோது திடீரென விபத்துக்குள்ளானது.  இச்சம்பவத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் என கவர்னர் விளாடிமிர் சோலோடோவ்  கூறியுள்ளார். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து ஓடுபாதையில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |