பீகார் தேர்தலின்போது பெரிய கட்சிகள் எல்லாம் தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தியதாக AIMIM கட்சியின் தலைவர் திரு. அசாதுதீன் ஓவைசி வேதனை தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திரு. அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி தனித்துப் போட்டியிட்ட 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் தேர்தலில் வாக்குகளை ஓவைசியின் கட்சி பிரித்து பாஜாகாவுக்கு மறைமுகமாக உதவியதாகவும் பாஜக-வின் BT கட்சி எனவும் எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஓவைசி தங்கள் கட்சியின் பீகார் தலைவர் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தும் தங்களுடன் கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை என்று கூறினார்.
பெரிய கட்சிகள் தங்களை தீண்டத்தகாத அவர்கள் போல் நடத்தியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். முஸ்லிம் தலைவர்களை சந்தித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஓவைசி தோல்வியால் கிடைத்த விரத்தியை மறைக்கவே தங்களை BT-ம் எனக் கூறுகிறார்கள் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பே பீகாரில் அரசியல் பயணத்தை தங்கள் கட்சியை தொடங்கி விட்டதாகவும் அரசியலில் தவறுகளில் இருந்தே பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்றும் திரு. ஓவைசி அப்போது மேலும் கூறினார்.