Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீண்டத்தகாத சாதி எது?….. பருவத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை….. விளக்கமளித்த பள்ளி நிர்வாகம்..!!

தீண்ட தகாத சாதி எது என மதுரையில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியின் ஆறாம் வகுப்பு பருவத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. பழங்காலத்தில் இருந்த சமத்துவமின்மை பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டதாக தனியார் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மதுரையில் இருக்கக்கூடிய தனியார் சிபிஎஸ்சி வல்லபா வித்யாலயா பள்ளியில் தற்போது பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சமூக அறிவியல் பாடத் திட்டத்திற்கான பருவத் தேர்வு நடைபெற்ற நிலையில், அந்த தேர்வின் போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. குறிப்பாக மும்பை மாகாணத்தில் எந்த ஜாதியினர்  தீண்ட தகாதவர்களாக பார்க்கப்பட்டனர் என குறிப்பிடப்பட்டு மூன்று விதமான ஜாதியின் பெயரை குறிப்பிட்டு, அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வி என்பது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

இந்த கேள்வி தொடர்பாக அந்த பள்ளியில் பயிலக்கூடிய ஒரு மாணவனின் பெற்றோரே அந்த பள்ளிக்கு கேள்வியாக எழுப்பி உள்ளார். இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என கேள்வி கேட்கப்பட்டதை  தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அதற்கு விளக்கத்தை அளித்துள்ளது.

அதில், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பாட புத்தகத்தில் இருந்த தகவல்கள்படியே கேள்வி கேட்கப்பட்டது. அந்த பாட புத்தகத்தின் 19 ஆவது பக்கத்தில் பழைய காலத்தில் சமத்துவமின்மை என்பது எவ்வாறெல்லாம் பின்பற்றப்பட்டது என்பதை விளக்கும் விதமாக இந்த பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்வி என்பது எழுப்பப்பட்டுள்ளது. இது போன்ற தவறு இனிமேல் வராமல் பார்த்துக் கொள்கிறோம். பள்ளி மாணவர்களிடம் ஜாதி பாகுபாடு, தீண்டாமை குறித்து நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பழங்காலத்தில் சமத்துவமின்மை எவ்வாறு பின்பற்றப்பட்டது என்பதை விளக்கும் விதமாக பாடத்திட்டத்தில் இருந்து ஏற்கனவே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருக்கக்கூடியதிலிருந்து தான் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தாங்களாகவே முன்வந்து இந்த கேள்வியை எழுப்பவில்லை. வருங்காலத்தில் இது போன்ற கேள்விகள் கேட்கப்படாது என மதுரை தனியார் பள்ளியின் முதல்வர் உறுதியளித்துள்ளார்..

 

 

Categories

Tech |