தீண்டாமை சுவரை அதிகாரிகள் இடித்ததால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சென்ற ஐம்பது வருடங்களாகவே வசித்து வருகின்றார்கள். இவர்கள் செல்லும் பொது வழி பாதையை சிலர் ஆக்கிரமித்து தீண்டாமை சுவர் எழுப்பியதாக சொல்லப்படுகின்றது.
இதனால் இந்த சுவற்றை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் மலைவாழ் மக்கள் சென்ற 12ஆம் தேதி, உடனே தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதையடுத்து அவர்களின் கோரிக்கை மனுவை தாசில்தார் பெற்றுக்கொண்டு ஓரிரு நாட்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார். இந்த நிலையில் நேற்று தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.