சேலம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி தீயணைப்பு மீட்பு வீரர்கள் தீத்தடுப்பு செயல் முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் ஓமலூர் நிலைய அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டு தீத்தடுப்பு முறை பற்றி செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர். இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தீத்தடுப்பு பற்றி அறிந்து கொண்டு பயனடைந்து சென்றுள்ளனர். மேலும் பொது மக்களை அழைத்து செய்முறை பயிற்சியும் அளித்துள்ளனர்.