தீபத்தை வணங்குவது இந்து மக்களின் மரபு. உலகில் உள்ள அனைத்து விதமான அழுத்தங்களையும் அகற்றும் சக்தி தீபத்திற்கு உண்டு. அந்த தீபத்தை வணங்குவதற்கு என்று சில முறைகள் உள்ளன. அவ்வகையில் எந்த திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல பலன்களை பெறலாம் என்பது பற்றிய தொகுப்பு.
கிழக்கு
கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்விலிருந்து துன்பங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷம் நீங்கி இல்லத்தில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். வீடு இல்லாதவர்கள் புதிதாக வீடு வாங்கும் யோகம் வரும்.
தென்கிழக்கு
தென்கிழக்கு திசையை நோக்கி தீபம் ஏற்றுவதனால் குழந்தைகளின் அறிவு கூர்மை அதிகரிக்கும். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அதோடு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றும் போது அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் வைத்து விடவேண்டும்.
தெற்கு
தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுதல் கூடாது. அது மரணத்தை ஏற்படுத்தும். வீட்டில் யாராவது இறந்தால் பண வசதி இல்லாதவர்கள் தெற்கு திசை நோக்கி கோயிலில் தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுக்கிரகத்தைப் பெற்று தர முடியும்.
தென்மேற்கு
தென்மேற்கு திசையை நோக்கி தீபம் ஏற்றுவதனால் ஆண்களால் பெண்களுக்கு ஏற்பட இருக்கும் கழகம், துன்பம் போன்றவை நீங்கிவிடும். திருமண தடை அகலும் .
மேற்கு
மேற்கு திசையை நோக்கி தீபம் ஏற்றுவதனால் பணத்தினால் ஏற்பட்ட பகை வளராமல் நீங்கிவிடும். கடன் தொல்லை குறையும்.
வடமேற்கு
வடமேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதரத்துவம் அதிகரிக்கும். குடும்ப சண்டைகள் ஏற்படாமல் இருக்கும்.
வடக்கு
வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் மாங்கல்யத்தை மதிக்காத பாவம் இருந்தால் விலகிவிடும். திருமணம் கைகூடி வரும்.
வடகிழக்கு
வடகிழக்கு திசையை நோக்கி தீபம் ஏற்றுவதனால் வீட்டின் தலைவர் கொடையாளியாக இருப்பார். அவரும் அவரது குழந்தைகளும் தங்களுக்கு அறியாமல் தானம் செய்வர்.
தீபம் என்பது வெறும் விளக்கு இல்லை. நமது வாழ்க்கையின் கலங்கரை விளக்கு. இல்லத்தில் மங்களம் நிரந்தரமாக இருக்கவும் இன்பம் அதிகரிக்கவும் தீபத்தை ஏற்றுங்கள். இறை வெளிச்சத்தில் இன்பத்தை பார்ப்போம்.