Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள்?….. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 21ஆம் தேதி ஆன வெள்ளிக்கிழமை அன்று பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தென் மாவட்ட விரைவு ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை மற்றும் செங்கோட்டை விரைவு ரயில்களில் காத்திருப்பு பயனியர் பட்டியலில் 320 பேர் உள்ளனர். ஆம்னி பேருந்துகளில் பழக்கமான நாட்களை விட பண்டிகை காலங்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னை மற்றும் மதுரை, நாகர்கோவிலுக்கு அதிகபட்சமாக 3000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.அதனால் தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களையும் முன்பதிவு இல்லாத ரயில்களையும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், விரைவில் தென் மாவட்டங்கள் மற்றும் கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |