இந்த இனிப்பு குலாப் ஜாமுன் செய்து பாருங்க வேற வகை ருசி இந்த தொகுப்பில் காணலம்:
குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:
சக்கரை – 1 கப்
ஏலக்காய் – 6
பால் பவுடர் – 2கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டேபிள் ஸ்பூன்
பால் – 8 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் குலாப் ஜாமிற்கு உண்டான சக்கரை பாகினை தயார் செய்யவும். அதற்கு ஒரு கடாயில் 1 கப் சக்கரை அளவிற்கு தண்ணீரும் ஊற்றி கலந்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். அதனுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். அடுத்தது சக்கரை பாகு தயார்.
பின்பு குலாப் ஜாமுன் செய்ய துவங்கலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், நெய், மைதா மாவு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் பால் கலந்து பிசைந்து கொள்ளவும்.
அதன் பின் பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை போட்டுபொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அதனை, நாம் ஏற்கனவே தயார் செய்த சக்கரை பாகில் ஊற வைக்கவேண்டும். இப்போது சுவையான குலாப் ஜாமுன் ரெடி