Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளிக்கு இல்லையா…?” முன்கூட்டியே வெடிக்கும் கார்த்தியின் “சார்தார்”…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் முதலிடம் பிடித்தது.

இத்திரைப்படமானது தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் படக்குழு இதுவரைக்கும் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு முன்பாகவே வருகின்ற 21ஆம் தேதி வெளியாக உள்ளது உறுதியாகி இருக்கின்றது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படமும் வருகின்ற 21-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள். தற்போது கார்த்தியின் சர்தார் திரைப்படமும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படக்குழு பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

Categories

Tech |