தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு செல்வார்கள். இதனால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும். இதனால் மக்கள் கூடும் இடங்களிளை குறிவைத்து வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலம் வருவதால் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் கூடும் இடங்களில் வழிப்பறி போன்றவற்றை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். Face Detection மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும். கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.