நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் மின்சாரத்திற்கு டிமாண்ட் இருப்பது வழக்கம் தான்.கடந்த வருடம் பண்டிகை காலத்தின் போது இந்தியாவில் கடுமையாக மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் அதற்கு முக்கிய காரணம் நிலக்கரி பற்றாக்குறை தான்.இந்நிலையில் இந்த வருடம் பண்டிகை காலத்தில் மின் தட்டுப்பாடு மின்வெட்டும் ஏற்படுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே இந்த வருடம் பண்டிகை காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் அலோக்குமார் தெரிவித்துள்ளார்.அதன்படி இதுவரை 20 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டை நினைவில் கொண்டு இந்த வருடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவது மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வருடம் பண்டிகை காலங்களில் கட்டாயம் மின் தட்டுப்பாடு ஏற்படாது.இதற்கு மேல் தேவைக்கு ஏற்ப நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்றும் எதிர்பாரா சூழல்களை சந்திக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது m