வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்பு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24ஆம் தேதிகளில் வலுவடையக்கூடும்.
தொடர்ந்து 25ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது வடக்கு நோக்கி நகர்ந்து மேற்குவங்கம் அருகே கரையை கடக்க இருப்பதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.