நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கொரோணா பரவல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளுக்கும் இயங்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மண்டல அலுவலர்களும் இறைச்சி கடைகள் மற்றும் கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.