Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தியில், யுவர் பிளாட்பார்ம் என்ற மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் உள்ள பல ரயில்களிலும் டபுள் டக்கர் ரயிலில் பயணித்தோருக்கு இந்த இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இந்த இதழை தமிழ்,இந்தி மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் பயணியர் இடையூறு இல்லாமல் பயணிக்கும் நோக்கத்தில் நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.மேலும் தீபாவளிக்காக ஏற்கனவே பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் தேவைக்கு ஏற்ப தீபாவளி சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |