Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது…. மீறினால் ஜெயில் தான்?…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுதும் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட இருக்கிறது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்று, கடந்த வருடத்தை போன்று காலை 6 -7 மணி வரையிலும், இரவு 7 -8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூபாய்.200 அபராதமும், 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் அறிவித்து இருக்கிறார். மேலும் பட்டாசு தயாரித்தல், வைத்தல் மற்றும் விற்றால் ரூபாய்.5,000 வரை அபராதமும், 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பட்டாசு தடையை நடைமுறைபடுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் ஜனவரி 1, 2023 வரையிலும் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |