Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளிக்கு புதிதா இதை ட்ரை பண்ணுங்க… சுவையோ சுவை ….!!!

தீபாவளிக்கு புதிய பர்ஃபி, இதை எப்படிசெய்வது என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

தேவையான பொருள்கள் :

பால் பவுடர்                                        – 1 கப்
பால்                                                       – 1/4 கப்
பொடி செய்யப்பட்ட சர்க்கரை  – 1/3 கப்
நெய்                                                       – 3 டேபிள் ஸ்பூன்
நட்ஸ்                                                    – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
குங்குமப்பூ                                         – 4 சிட்டிகை

செய்முறை :

முதலில் ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்ற வேண்டும். பின் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கெட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு பொடி செய்யப்பட்ட சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு கலவையானது கெட்டியாக ஆரம்பித்து, வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும்.

அப்படி நன்கு கெட்டியாகி வரும் போது, சிறிது கலவையை எடுத்து உருட்டி பார்க்கவும். அவ்வாறு உருட்டும் போது, எளிதில் பந்து போலானால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின் ஒரு அகலமான தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி விட்டு, அதன் மேல் குங்குமப்பூ மற்றும் நறுக்கிய நட்ஸ்களை தூவி, ஒரு நெய் தடவிய ஸ்பூன் கொண்ட லேசாக அழுத்தி விட்டு, 10-15 நிமிடம் அறை வெப்பநிலையில் அப்படியே வைக்க வேண்டும்.

இறுதியில் ஒரு கத்தியால் அதை சதுர துண்டுகளாக வெட்டினால், சுவையான பால் பவுடர் பர்ஃபி தயார்.

Categories

Tech |