மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி மந்திரி கூறியுள்ளார்.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கிறது.அம்மாநிலத்தில் தற்போது வரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் நாடு முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மராட்டிய பள்ளி கல்வி மந்திரி வர்ஷா இதுகுறித்து கூறுகையில், “தீபாவளி பண்டிகைக்கு முன்னர் மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் கட்டாயம் திறக்கப்படாது”என்று அவர் கூறியுள்ளார்.