தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடி மகிழுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.