Categories
பல்சுவை

தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா…??

தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே இந்த செய்தி தொகுப்பு.

தீபாவளியன்று அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து நலங்கு சுண்ணாம்பு கலந்த கலவையை பெரியோர்கள் காலில் இட்டு  விழுந்து வணங்குவர். தலை மட்டும் உடல்களில் நல்லெண்ணெய் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பிறகு வெந்நீரில் குளித்துவிட்டு பின் புத்தாடை அணிந்து கொள்வர். நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து நீராடுவதற்கு கங்கா ஸ்நானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனை முறைப்படி அனைவரும் பின்பற்ற வேண்டும்.

புத்தாடை அணிந்த பிறகு வீட்டில் செய்த சுவையான பழங்களை உண்டு பலகாரங்களை நமது உறவினர்கள் வீடான மாமா அத்தை வீடுகளுக்கு மாறி மாறி எடுத்துச் சென்று வழங்கி பின் பாதுகாப்பான முறையில் வெடி வெடித்து விட்டு அதன்பின் தாத்தா பாட்டி போன்ற பெரியோர்களை நேரில் சந்தித்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று விட்டு மீண்டும் வீடு திரும்பி பின் வழக்கம் போல் வெடிகளை வெடித்து கொண்டாட வேண்டியதுதான். தீபாவளி பண்டிகை அடிப்படையில் இந்து பண்டிகையாக இருந்தாலும் சாதி மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி மட்டுமே. அத்தகையை தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவோம்.

Categories

Tech |