நடிகர் யோகி பாபு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைசுவை நடிகராக மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கோவிலில் நடைபெற்றது. நடிகர் யோகி பாபு கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தந்தையானார்.
இந்நிலையில், தீபாவளி ஆனநேற்று இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் யோகி பாபு. ஆம், இன்று யோகி பாபு – மஞ்சு தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.