Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

தீபாவளியை… எதனால் சிறப்பாக கொண்டாடுகிறோம்… தெரியுமா?

தீபாவளியை நாம் சீரும் சிறப்புமாக கொண்டாடபடுவதற்கான காரணத்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  
புது ஆடை  போட்டு , பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வகைகள்,  போன்றவற்றினை இறைவனுக்குப் படைத்து சாமி கும்பிடுவோம். இராமாயணத்தைப் பொறுத்தவரையில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற இராமன், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் நாடு திரும்பிய நாளான அந்த தினமே தீபாவளியாக கொண்டாடுகிறோம்.
இதுவே இந்துக்களின் மற்றொரு புராண நூலான மகாபாரதத்தில் மக்களுக்குப் பெரும் துன்பம் கொடுத்துவந்த அசுரனான நரகாசுரனை கண்ணன் அவதாரம் எடுத்து வந்து வதம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. நரகாசுரனைக் கொல்லவும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இதனைப் பார்த்தனர். அதாவது நரகாசுரனால் ஏற்பட்ட துன்பத்தில் இருந்து மீண்டதையடுத்து, எண்ணெய் தேய்த்து குளித்து புதுத் துணி உடுத்தி பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.

Categories

Tech |