பீஸ்ட் படத்தின் முதல் பாடலை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடலை வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் அனிருத் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், விஜய்யின் அறிமுகப் பாடலை தீபாவளிக்கு வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.