Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில்….. குமரியில் ரூ.10 1/2 கோடிக்கு…. மது விற்பனை…!!

 

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இந்த மதுக்கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், விழாக்காலங்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் போன்ற தினங்களில் வழக்கத்தைவிடவும் மதுபானங்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். அதாவது சாதாரண நாட்களில் 2½ கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் மதுபானம் விடுமுறை தினங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும், அதற்கு மேலும் விற்பனையாகும்.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தைய நாளில் ரூ.3 கோடிக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. மேலும் தீபாவளி பண்டிகை அன்று (சனிக்கிழமை) 3½ கோடிக்கும், நேற்று 4 கோடி ரூபாய்க்கும் என மொத்தம் 10½ கோடி ரூபாய்க்கு மது விற்பனை அமோகமாக இருந்துள்ளது. பீர் பாட்டில்களைவிட, மதுபான பாட்டில்கள் தான் அதிகம் விற்பனையாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |