தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்ததால் பெரியளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 16 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப் புகையை சுவாசித்து இருப்பமோ அந்த அளவிற்கு சென்னை வாசிகள் நேற்று நச்சுப் புகையை சுவாசித்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் அதனைப் பற்றி கவலைப்படாமல் காலை முதல் இரவு வரை பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
ஒரு நாளைக்கு 16சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்து இருப்பமோ அந்தளவிற்கு சென்னைவாசிகள் நேற்று நச்சுப்புகையை சுவாசித்துள்ளனர்,இதனால்தான் பட்டாசுகள் வேண்டாம்.
குழந்தைகள்,பெரியவர்கள் என எத்தனைபேர் இன்று/நாளை மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று பாருங்கள். @AqiTamilnadu pic.twitter.com/KXhCJNxO5l— G. Sundarrajan (@SundarrajanG) October 25, 2022
இதன் காரணமாகதான் சென்னையில் கரும்புகை மண்டலம் ஏற்பட்டது. மேலும் பல பகுதிகளில் காற்று மாசு அதிகரித்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடத்தை போன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வெளியிடப்படிருந்தது. ஆனால் மக்கள் அந்த அறிவுறுத்தல்களை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.