நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக மக்கள் பட்டாசு வெடித்து வரும் நிலையில் சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
காற்றில் நேற்று நுண்துகள்களின் அளவு 109 ஆக இருந்த நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் 192 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மணலி, ராயபுரம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இன்று இரவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.