Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி….. 1 கிலோ இவ்வளவு ரூபாயா?…. கவலையில் மல்லிகைப் பூ பிரியர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர்மழை காரணமாக வரத்து குறைவால் பூக்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதில் நிலக்கோட்டை சுற்று வட்டாரம் பகுதியில் மல்லிகைப் பூவானது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று அதிகளவில் பூக்கள் விவசாயம்தான் அப்பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் துவங்கியுள்ளது.

தற்போது சென்ற சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்களானது செடியிலேயே உதிர்ந்துவிடுவதால் அதன் வரத்து குறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூ வரத்தும் குறைந்திருக்கிறது. கடந்த சில தினங்களாக 1 கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 700 க்கு மட்டுமே விற்பனையாகியது. இப்போது 1 கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 1200 -1500 வரை விற்பனையாகி வருகிறது. இதேபோன்று மற்ற பூக்களுக்கும் சற்று விலை உயர்வாக விற்பனையாகி வருகிறது.

Categories

Tech |