நாம் அனைவரும் ஏன் திபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்றதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் பொன், பொருள், வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீபாவளிக்கு காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் பூஜை செய்தல் வேண்டும். மாலையில் திருக்கார்த்திகையில் செய்வதுபோல் வீடு முழுவதும் அகல் விலக்குகளை ஏற்றி வழிபாடு செய்யவேண்டும்.
தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெய்யில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் செல்வ செழிப்பு ஏற்படும்.தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் வளம் மென்மேலும் வளரும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்கவேண்டும்.
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் பீடைகள் விலகும். புண்ணியம் கிடைக்கும். புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்து கொள்ள வேண்டும். பெற்றோரிடம், வீட்டுப் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் சிறப்புமிக்கது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம்.