உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் கோமதி நகர் பத்திரகார்புரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலர் தெருவோரம் கடைகளை போட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.அதில் தீபாவளிக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மண் விளக்குகளை இளம் பெண் ஒருவர் திடீரென கம்புகளை கொண்டு அடித்து நொறுக்கினார். அவரின் வீட்டில் முன்னால் கடைகளை அமைத்துள்ளனர்.
அந்த ஆத்திரத்தில் அந்தப் பெண் முதலில் தண்ணீரைக் கொண்டு வந்து அவர்கள் மீது வீசி எறிந்தார். அதன் பிறகு கம்புகளை கொண்டு வந்து கடைகளை அடித்து நொறுக்கினார். அந்தப் பெண் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.