பண்டிகை காலம் என்பதால் தியேட்டர்கள் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
நாடு முழுவதும் கொரோனா தோற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது முடகத்தில் தளர்வுவர்கள் அளிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் தளவர்களுடனான பொது முடக்கம் முடிவடைகிறது.
இந்நிலையில் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நவம்பர் மாதம் பண்டிகை காலம் என்பதால் தியேட்டர்கள் திருப்பது பற்றி நல்ல செய்தி வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.