சென்னை தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் புதியதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.