தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தவர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புது காலனியில் சாமிதுரை என்பவர் தனது மனைவி அருள்மொழியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சாமிதுரை தனது சொந்த ஊரான நூத்தாப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சாமிதுரையின் மனைவி அருள்மொழியும் நூத்தாப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் அந்தப் பகுதியில் வசித்து வரும் மகாலட்சுமி என்பவர் சாமிதுரையின் வீட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக கைபேசியில் அவரை அழைத்து தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சாமிதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 15,000 மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சாமிதுரை பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.