Categories
பல்சுவை

தீபாவளி சலுகை: கம்மி விலையில் கூடுதல் டேட்டா…. வோடபோன் ஐடியா பயனர்களுக்கு சூப்பர் சூட் நியூஸ்…..!!!

வோடபோன் ஐடியா 2022ம் வருடத்திற்கான தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. இச்சலுகை இன்று முதல் 31 ஆம் தேதி வரை பொருந்தும். இந்த புது தீபாவளி சலுகையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் ரீசார்ஜ் வாயிலாக வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டாவைப் பெறுவர். இது புது ப்ரீபெய்ட் திட்டங்கள் அல்ல. ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை சேர்த்து இருக்கிறது. வோடபோன் ஐடியா மொத்தம் 3 திட்டங்களை தீபாவளி சலுகையாக குறிப்பிடுகிறது. எனினும் நிறுவனம் வெளியிட்டுள்ள சலுகையின் பேனரில் 2 திட்டங்கள் மட்டுமே தெரியும்.

வாடிக்கையாளர்களுக்கு 3 திட்டங்களுடன் கூடுதல் டேட்டாவை பெறலாம். வோடபோன் ஐடியாவின் ரூபாய்.1449 திட்டத்தில், அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள், 1.5gp தினசரி டேட்டா, நாளொன்றுக்கு 100 sms பெறுவர். இத்திட்டத்தில் வேலிடிட்டி சேவை 180 நாட்கள் ஆகும். அத்துடன் Vi Movie மற்றும் TV VIP அணுகலுடன் அனைத்து Vi Hero அன்லிமிடெட் பலன்களும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தில் பயனாளர்கள் 50gp கூடுதல் டேட்டாவை பெறுவர். Vi வழங்கும் ரூபாய்.2899 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்பு, 1.5gp தினசரி டேட்டா, நாளொன்றுக்கு 100 SMS பெறுவர். 365 தினங்கள் செல்லுபடி ஆகும். அதன்பின் Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் Vi Movies, TV VIP சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.

இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது 75ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கும். வோடபோன் ஐடியாவின் ரூபாய்.3099 திட்டம் நீண்டகால வேலிடிட்டியை விரும்புபவர்களுக்கானது. இத்திட்டத்தில் பயனாளர்கள் 365 நாட்கள் சேவை செல்லுபடி ஆகும். 2ஜிபி தினசரி டேட்டா, 100 SMS/நாள், அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்பு, Vi Hero அன்லிமிடெட் பயன்கள், Vi Movies & TV VIP, Disney+ Hotstar மொபைல் ஒரு ஆண்டுக்கு மற்றும் 75ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கும். இந்த 3 திட்டங்கள்தான் தற்போது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதில் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

Categories

Tech |