Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு இனிப்புகள்…. ஆவினில் முன்பதிவு செய்ய இணையதள வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் 225 வகையான பால் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலமாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றது. ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, ஸ்டப் மோதி பாக், காஜூ பிஸ்தா ரோல், காஜூ கத்திலி, வகைப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா மற்றும் மிக்சர் என அனைத்தும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்புகள் அனைத்தும் ஆவி நெய்யால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு வண்ண அட்டைப்பெட்டியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களிலும்,பொதுமக்கள் கூடும் சந்தைகள் மற்றும் சாலை சந்திப்புகள் என பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து சிறப்பு தற்காலிக விற்பனை மையங்கள் மூலமாக எளிதில் மக்களுக்கு கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காரம் மற்றும் இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து கூடுதல் தகவல்களை அறிய 18004253300 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |