Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகள்….. தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய்….. போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சொந்த ஊருக்கு மக்கள் சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு வருடமும் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பயணிகளுக்காக 11 சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக தாம்பரம், கோயம்பேடு கே.கே நகர், மாதவரம், பூந்தமல்லி 5 மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.   தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் கடந்த 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  இந்நிலையில் சிறப்பு பேருந்துகளின் மூலம் தமிழக அரசுக்கு 9 கோடியே 54 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

 

Categories

Tech |