தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலமாக 9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை கூறியுள்ளது. இது பற்றி தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலமாக தமிழக அரசுக்கு சுமார் 9.5 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. 16, 888 சிறப்பு பேருந்துகள் மூலமாக சுமார் 2.8 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.
Categories