Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு ரயில்கள்…. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?….. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில்,

சென்னை எழும்பூரில் நவம்பர்  , 3 இரவு 10:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06037) மறுநாள் காலை 11:00 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் நவம்பர்  5 மதியம் 3:10 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில் (06038) மறுநாள் அதிகாலை 5:20 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும்.இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலியில் நின்று செல்லும்.

நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சென்னை மாம்பலத்திலும், சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில் அரியலுாரிலும் நிற்கும்.திருநெல்வேலியில் நவம்பர்  , 7 இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06040) தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக மறுநாள் காலை 7:55 மணிக்கு தாம்பரம் செல்லும்.

இந்த ரயில் அம்பாசமுத்திரம், கீழ்க்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலுார், விழுப்புரம், செங்கலப்பட்டில் நின்று செல்லும்.தாம்பரத்தில் நவம்பர்  , 8 மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06049) மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

Categories

Tech |