Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு என்ற பெயரில் மோசடி…. பொதுமக்கள் புகார் அளிக்கலாம்…. குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஈச்சம்பாடி கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவர் சீனிவாசா தெருவில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் வசூல் செய்த பணத்தை திரும்ப கொடுக்காமல் சிவகுமார் மோசடி செய்ததாக அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தீபாவளி சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வந்து அசல் சீட்டு, அசல் ஆவணங்களை வைத்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |