குழந்தைகளோடு மாயமான பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தீபாவளி சீட்டு சேகரிப்பு செய்து தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக காமாட்சியிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள் அதன் முதிர்வு தொகையோடு பணத்தை கேட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் 9 வயது மகன், 6 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராஜ் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் ஜெயராஜ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காமாட்சி மற்றும் அவரது குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.