Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு”… 10 கோடி மோசடி… 2 பேர் கைது…. தீவிர தேடுதலில் போலீசார்…!!!!

தீபாவளி சீட்டு நடத்தி 10 கோடி மோசடி செய்த வழக்கில் நிறுவன மேலாளர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் ஜோதி என்பவர் தீபாவளி நகை பண்டு திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவரிடம் சீட்டு சேர்த்தியுள்ளார். ஜோதிக்கு உடந்தையாக அவரின் மனைவி சரண்யா, சகோதரர் பிரபு, தந்தை மதுரை மற்றும் கடை மேலாளர்களாக நாகலட்சுமி, சரண்ராஜ், வேணுகோபால், சத்தியமூர்த்தி, அவரின் மனைவி உள்ளிட்டோர் இருந்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் அனைவரும் ஆண்டுதோறும் தவணை பணத்தை சரியாக செலுத்தி வந்த நிலையில் ஜோதி உள்ளிட்ட அனைவரும் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார்கள். இவர்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் 10 கோடிக்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது. இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சரண்ராஜ், வேணுகோபால் உள்ளிட்ட இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |