Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி – சென்னையிலிருந்து 14,757 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி இன்று முதல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும். வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்தும். திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்தும்.

தஞ்சாவூர், கும்பகோணம் செல்லக்கூடிய பேருந்துகள் தாமரத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. கேகே நகரில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று 225 பேருந்துகளும் நாளை 1,705 பேருந்துகளும், நாளை மறுநாள் 1,580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கையாக கோயம்பேட்டில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |