Categories
சினிமா தமிழ் சினிமா

‘தீபாவளி நவம்பர் 25 தான்டா’… மாநாடு பட நடிகரின் மாஸ் டுவீட்…!!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா மாநாடு படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருந்த நிலையில், தற்போது நவம்பர் 25-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘மாநாடு படத்தில் 8 நாட்களில் முடிக்க வேண்டிய என்னுடைய டப்பிங்கை 5 நாட்களில் முடித்திருக்கிறேன். என் நாடி, நரம்புகள், முதுகு, முதுகுத்தண்டு, தொண்டை என அனைத்தும் போய்விட்டன. அவை குறைந்தபட்சம் பத்து நாட்களாவது ஓய்வு கொடு என கேட்கின்றன. உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று தான், தீபாவளி நவம்பர் 25 தான்டா’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |