ராஜஸ்தானில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மணிநேரம் தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடித்து கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார். அதன்படி தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் பட்டாசுகளை வெடித்து கொள்ளலாம். அதேசமயத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசுகளாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர அரசின் விதிமுறைகளுக்கு எதிராக பட்டாசுகளை விற்பனை செய்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்கு மேல் பட்டாசுகள் வெடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.