Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தயாராகிவிடும்”…. போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்….!!!!!!!!

தலைநகர் சென்னைக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வாகன பயன்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் சென்னை மாநகர் திணறும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை அடையாளமாக திகழும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றார்கள். இங்கிருந்து புறப்படும் பேருந்துகளால் நகருக்குள் நெரிசல் ஏற்படுவதை தடுக்க இயலாது அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவே தேவையில்லை. இதற்கு தீர்வு காணும் விதமாக வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முடக்கி விடப்பட்டிருக்கிறது.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பில் கடந்த 2019 கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பணிகள் தாமதமாகியுள்ளது. தற்போது நிலைமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி இருப்பதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் மீண்டும் வேகம் எடுத்து இருக்கின்றன. இந்த நிலையில் புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டது. பூச்சி வேலை, மின்சார இணைப்பு பயன்படுத்தப்படும் வசதிகள் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை அடுத்த ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கோயம்பேட்டில் செயல்படும் வெளியூர் பேருந்து சேவைகளை கிளாம்பாக்கத்திற்கு மாற்றுவது தொடர்பான சேவை பெருநகர வளர்ச்சி குழுமம் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேருந்து சேவை மாற்றத்திற்கான வழிமுறைகள் வகுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்திற்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் போன்றோர் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் மாநகர போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழகம், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேம்பாட்டு குழுமம் போன்றவற்றின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளை நிறுத்த தேவையான வசதிகள் மாநகர பேருந்துகள் நிறுத்துவதற்கான இட வசதிகள் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான இட வசதிகள் இவை தொடர்பான பிற வசதிகள் போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் வெளியூர் இருந்து சென்னை வருவோர் கிளாம்பாக்கத்தில் இருந்து பிற போக்குவரத்து வசதிகளை எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை போக்குவரத்து கழகங்கள் விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகின்றது. இதன் மூலமாக வரும் தீபாவளி பண்டிகைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழு வீச்சில் தயாராகிவிடும் என்பது உறுதியாகிவிட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |