Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம்” என்னென்னு பார்த்து தெரிஞ்சிகோங்க….!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம்.

தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம்

தீபாவளி என்ற சொல்லுக்கு தொடர்ச்சியான ஒளி விளக்குகள் என்று பொருள். தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியை குறிக்கும். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் குறிக்கும். கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்த தினம், சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரத நாள், லட்சுமிக்கு உகந்த நாள் என பல்வேறு சிறப்புகள் இந்த நாளில் சொல்லப்படுகிறது. தீபாவளி நாளில் மகாலட்சுமியை வழிபட்டதால்தான் குபேரர் சகல செல்வங்களையும் பெற்றதாக ஐதீகம்.

எனவே அன்றைய நாளில் லட்சுமி தேவியை வணங்கி அவளின் பரிபூரண அருளை பெறலாம். புராணங்களின்படி லட்சுமிதேவி, விநாயகர் மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தெய்வங்களும் இந்த நாளில் போற்றப்படுகிறார்கள். லட்சுமிதேவி பூமிக்கு வந்து ஒவ்வொரு வீட்டையும் பார்வையிடும் நேரத்தில் வீட்டை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என கூறப்படுகிறது. அப்படி செய்தால் தீபாவளி தினத்தில் லட்சுமி தேவியின் அருளை முழுமையாக பெறலாம்.

அக்டோபர் 22-ஆம் தேதி டாந்திரா என்ற பெயரில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. அன்றைய தினம் தங்க நகைகள் உள்ளிட்ட நகைகளை வாங்குகின்றனர். அக்டோபர் 23-ஆம் தேதி வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து ரங்கோலி வரைவர். 24-ஆம் தேதி அமாவாசை அன்று தீபாவளி பண்டிகையில் லட்சுமி பூஜை செய்து சிறப்பாக வழிபடுவர். அக்டோபர் 25-ஆம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. எனவே அதற்கு பதிலாக அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமை திதி அன்று கோவர்த்தன பூஜை செய்து வழிபடுகின்றனர்.

Categories

Tech |