உணவுகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க கடைகளில் குவிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ஹோட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகளை தயார்படுத்தி வருகின்றனர். சிலர் தரமற்ற இறைச்சியை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அஞ்சலி ரவுண்டானா அருகே இருக்கும் ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஹோட்டல் உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, பல்வேறு ஹோட்டல்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். தரமற்ற உணவு தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.