போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 697 பேர் மீது தீபாவளி பண்டிகை தினத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி 1500- க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 38 பேர், அதிவேகமாக வாகனம் ஒட்டிய 11 பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற 553 பேர், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 16 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற இரண்டு பேர் என மொத்தம் 697 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து அபராத தொகையும் வசூலிக்கப்பட்டது.