தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த சில வருடங்களாக பட்டாசு வெடிப்பதால் அதிக அளவு காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசுகள் வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அது அரசு விதித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் பற்றி கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற இருக்கிறது.
மேலும் இந்த ஆலோசனை கூட்டம் வருகின்ற 28ஆம் தேதி நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டம் வருவாய் துறை தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது போன்றவை பற்றி ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிகின்றது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு விற்பனை சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிகின்றது.