Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” ஊருக்கு போறீங்களா…? பயணத்திற்கான அலர்ட் டிப்ஸ்….!!!

தீபாவளி பண்டிகையின் போது ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பயணத்தின் போது கவனிக்க வேண்டியவை:

  • குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக மாத்திரைகள் இருமல், சளி மாத்திரைகள், வயதானவர்களுக்கு சுகர் மாத்திரை, பிரசர் மாத்திரை போன்ற அன்றாடம் உட்கொள்ள வேண்டியவற்றை மறந்து வைத்து விடக்கூடாது.
  • அதிக நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்லவிருந்தால் வீட்டில் இருக்கும் கேஸ் ஸ்டவ்விற்கும், சிலிண்டருக்குமான பைப் இணைப்பினை பிரித்து சிலிண்டரை தனியே அதற்கான மூடியால் மூடி விடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் வீட்டில் எலிகள் தொல்லை இருந்தால் பைப் சேதமடைந்து காஸ் கசிவினால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.
  • தொலைதூரப் பயணங்களை மேற்கொண்டால் பிஸ்கட், பால், பிளாஸ்டிக் மற்றும் மருந்து பொருட்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதிகமான கை பைகளை பேருந்தில் எடுத்துச் சென்றால் கவனமாக இருக்க வேண்டும்.
  • பயணத்தின் நடுவே குடிநீர் உணவுப்பொருட்களை வாங்க வேண்டும் என்றால் அவை சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • தற்போது மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அருகில் வசிக்கும் நம்பிக்கையானவர்களிடம் வெளிய கிளம்புவதே முன்கூட்டியே சொல்லி வைக்க வேண்டும்.
  • விடுமுறை முடிந்து ஊர் செல்ல விரும்புவர்கள் ஒரு நாள் முன்னதாகவே கிளம்ப வேண்டும். கடைசி நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுவதை தவிர்க்கலாம்.

Categories

Tech |